இ.போ.சபையின் வட பிராந்திய சாலை நிர்வாக முறைகேடுக்கு எதிராகப் போராட்டம்

Published By: Digital Desk 4

12 Dec, 2018 | 12:45 PM
image

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.

இ.போ.ச வட பிராந்திய சாலையின் நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் நடைபெறுகின்ற அதே வேளையில் தொடர்ந்தும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன. தங்களது பதவிகளுக்காகவும் மற்றும் சலுகைகளுக்காகவும் தொழிலாளர்களைப் பழிவாங்கும் செயற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் சீர்கேடுகள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பில் குரல் கொடுக்கின்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீதும் பொய்க்குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு  பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதிகாரிகளின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம்.

அத்தோடு வட பிராந்திய நிர்வாகச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மேற்படி சங்கத்தினர் இதற்குரியநடவடிக்களகளை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயினும் இதற்குரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படாதவிடத்து தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்படி சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47