இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் மீதான இறைமையை இழந்தது ஏன்- அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் கருத்து

Published By: Rajeeban

12 Dec, 2018 | 12:30 PM
image

சீனாவிடமிருந்து பெற்ற கடன் காரணமாக இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது இறைமையை  கைவிடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது என அமெரிக்க  குடியரசுக்கட்சியின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்  டனா ரொஹ்ரபச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடன் கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா தேவையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை பயன்படுத்தி சிறிய நாடுகளை மோசடி செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா ஏழைநாடுகளால் திருப்பிசெலுத்த முடியாத அளவிற்கு கடன்களை அறவிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளால் கடன்களை திருப்பி செலுத்தமுடியாத சந்தர்ப்பத்தில் சீனா அந்த சொத்துக்களை கைப்பற்றுகின்றது என தெரிவித்துள்ள   டனா ரொஹ்ரபச்சர் சீனாவின் முக்கிய இலக்காக ஆழமான துறைமுகங்களே காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்,நாங்கள் இவ்வாறான போக்கை ஆசியா ஆபிரிக்கா இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் காண்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளமைக்கு சீனா கம்யுனிஸ்ட்களின்  தாங்கமுடியாத கடனிற்குள் இலங்கை மூழ்கியுள்ளமையும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆழமான துறைமுகத்தின் மீதான இறைமையை இலங்கை பறிகொடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02