பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

Published By: Rajeeban

12 Dec, 2018 | 10:24 AM
image

பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள்  காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர்  அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்  தாக்குதலின் போது காயமடைந்து வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் தாக்குதல் இடம்பெற்ற நகரத்தில் பிறந்தவர் ஏற்கனவே பொலிஸார் பயங்கரவாத தொடர்புகள் குறித்து அவர் மேல் சந்தேகம் கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபரின் தொடர்மாடியை பொலிஸார் சோதனையிட்டவேளை அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் வீட்டிலிருந்து மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூவர் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள காவல்துறையினர் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது சந்தேகநபரை தேடி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்

அனைத்து கிறிஸ்மஸ் சந்தைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17