கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை ஏமாற்றி பணம் அறவிடு

Published By: Vishnu

11 Dec, 2018 | 01:33 PM
image

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குவைத்து வாழ்வாதாரத்துக்கு மாடுகள் வழங்குவதாக ஏமாற்றி பணம் அறவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கிளிநொச்சியில் பால்கொள்வனவு செய்யும் இடங்களுக்கு சென்று பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் விபரங்களைத்திரட்டி அவர்களிடமிருந்து குடும்ப பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டை, வங்கிக்கணக்கு இலக்கம், கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற ஆவணங்களைத் திரட்டி அவர்களுக்கு நல்லிணக்க பசு மாடுகள் வழங்குவதாக தெரிவித்து  அவர்களிடமிருந்து  முற்பணங்களையும் பெற்றுச்சென்றிருந்தனர்.

அதாவது, கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான், உடுப்பாற்றுக் கண்டல் கிராமத்தில் வசிக்கும் பெண்தலைமைத்தவக் குடும்பம் ஒன்றிடம் ஆவணங்களைப்பெற்று குறித்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நுவரெலியாவிலிருந்து மாடுகள் கொண்டுவரப்படுவதாகவும் அதற்கு முற்பணமாக 56 ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறி வங்கிக்கணக்கு இலக்கத்தை அனுப்பியிருந்தனர்.

அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டமையால் குறித்த பெண் குறித்த வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு 56 ஆயிரம் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.

பணம் வைப்பிலிடப்பட்டதையடுத்து, குறித்த நபரின் தொலைபேசி செயலிழந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கபபட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் மற்றும் வங்கியிலும் நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளின் அடிப்படையில் குறித்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி இக்கம் 24, சிவபுரம் வவுனிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் வவுனிக்குளம் தபால் நிலைய உத்தியோகத்தர் என கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13