பழைய இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு நினைவுக் கல்

Published By: Digital Desk 4

11 Dec, 2018 | 12:19 PM
image

இரணைமடு 6குளத்தில்  திரை நீக்கம் செய்யப்பட்ட  முதலாவது நினைவுக் கல்  திட்டமிட்டப்படி அதே பகுதியில்  நீர்ப்பாசனத்திணைக்களத்தினரால் வைக்கப்பட்டுள்ளது. 

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் குறித்த சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவு கல்லையும்,புதிய நினைவு கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியினால் குறித்த குளம் விவசாயிகளிடம் கையளிக்க மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த  முதலாவது நினைவு கல்லை அப்பகுதியில் பொருத்த கால அவகாசம் போதுமானதாக இல்லாது போய்விட்டது

 இந்த நிலையில் ஜனாதிபதியால் திரை நீக்கம் செய்வதற்குரிய புதிய நினைவு கல்லை மாத்திரம் அன்றைய பொருத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. 

 இதற்கிடையில் சில  தமிழ் ஊடகங்கள் பழைய நினைவுக் கல் ஐதேக வின் நாட்டின் முதல் பிரதமர் டட்லி சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்ட கல்லை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி இல்லாது செய்து விட்டார் என செய்தி வெளியிடப்பட்டிருந்து. இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கிடையில்  குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் பொருத்துவதற்கு நடவடிக்கைகளை  நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. அதற்கமைவாக இன்று செவ்வாய் கிழமை காலை குறித்த கல் பழைய இடத்தில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 

பழைய நினைவுக் கல்லினை அகற்றும் அல்லது அழிக்கும் நோக்கம் காணப்பட்டிருந்தால்  குறித்த கல்லினை பாதுகாப்பாக அகற்றி  வைத்திருந்து அதனை மீளவும் அதே இடத்தில்  பொருத்தும் பணியை மேற்கொள்ளப்பட்டிருக்காது என நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38