நீதிமன்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரிக்கை முன்வைப்பு

Published By: Vishnu

11 Dec, 2018 | 09:06 AM
image

அர­சியல் நெருக்­கடி நீடித்­து­வரும் நிலையில் உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினை 14 ஆம் திக­திக்குள் வழங்­கு­மாறு கோரு­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தீர்­மா­னித்­துள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களின் கூட்­டத்தில் இதற்­கான அறி­விப்­பினை ஜனா­தி­பதி விடுத்­துள்ளார்.

சட்­டமா அதிபர் மூலம் பிர­தம நீதி­ய­ரசர் மூலம் இன்­றைய தினம் இந்தக் கோரிக்­கையை முன்­வைக்­க­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி இணைந்த கூட்­டணி ஒன்­றினை அமைக்­கவும் மைத்­திரி -மஹிந்த தரப்பு இணக்கம் கண்­டுள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும்  மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நேற்று பிற்பகல் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. 

ஏற்­க­னவே நேற்று முன்­தினம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். அதனை அடுத்து ஜனா­தி­ப­தியை சந்­தித்து நிகழ்­கால அர­சியல் நிலை­மைகள் மற்றும் அடுத்த கட்ட அர­சியல் நகர்­வுகள் குறித்தும் அர­சியல் பயணம்  தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தீர்­மா­னித்­தனர்.

 இந்­நி­லையில் நேற்று  ஜனா­தி­ப­தியை சந்­தித்து  மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சுமார் இரண்டு மணி­நேரம் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது. 

இதன்­போது தற்­போது நீடித்­து­வரும் அர­சியல் நெருக்­கடி குறித்தும் நீதி­மன்ற தீர்ப்பு தொடர்­பிலும் ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. புதிய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது அமைச்­ச­ரவை மீது நீதி­மன்றம் இடைக்­கால தடை விதித்­துள்ள நிலையில் அடுத்த கட்­ட­மாக எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38