மார்பக சலவை சடங்கு செய்யும் பெண்கள் : அதிர்ச்சியில் எம்பி (வீடியோ இணைப்பு)

Published By: Robert

28 Mar, 2016 | 11:53 AM
image

பிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry கூறியுள்ளார்.

கமெரூனை பிறப்பிடமாக கொண்ட இந்த பழக்கவழக்கங்கள் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக நடைபெறுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மார்பகங்கள் ஆண்களை கவரும் வகையில் கவர்ச்சியாக வளரக்கூடாது என்பதற்காக, சூடான கற்கள், பெரிய கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி மார்பகங்கள் மீது சூடு வைக்கின்றனர் (மார்பக சலவை சடங்கு).

மேலும், மார்பகங்கள் கடினமான பெல்ட் கொண்டும் கட்டப்படுகிறது, தற்போது இது போன்ற ஆபத்தமான செயல்களால் உலகளவில் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மக்களும் இந்த பழக்கவழக்கத்தை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry கூறியதாவது, இந்த செய்தியை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன், பிரித்தானியாவில் சுமார் 1,000 பெண்கள் இதுபோன்ற கொடூர பழக்கவழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை, வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொண்டால் பெண்களுக்கு இயற்கையான மார்பக வளர்ச்சி இருக்காது. மேலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வலியால் அவுதியுறும், அவர்கள் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

இந்த ஆபத்தான பழக்கவழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பழக்கவழக்கத்தை பின்பற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பெண்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர் Margaret Nyuydzewira கூறியதாவது, தற்போதைய நாட்களில் இந்த பழக்கவழக்கம் பிரித்தானியாவில் பின்பற்றப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52