அரசியல் பழிவாங்கல் காரணமாகவே இடமாற்றம் வழங்கப்பட்டது - மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

10 Dec, 2018 | 10:59 AM
image

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் அந்த இடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராமசேவகரையே மீள நியமிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் அரசஅதிபர் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24