வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று (09) காலை 8.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரின்  பயணப் பையிலிருந்து 1கிலோ 425கிராம் கேரளா கஞ்சாவினை வைத்திருந்த வெத்தலகேணி பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.