அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை

Published By: Daya

08 Dec, 2018 | 04:14 PM
image

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த ஒருசில தினங்களாக பாதிப்படைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

தாழ்நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாயச் செய்கைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடற்றொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேச கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்களுக்கு கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்கரைப் பிரதேசங்களில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக மீனவ வாடிகள், சிறு குடிசைகள் மற்றும் வள்ளங்கள் என்பவற்றுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒலுவில் சுளியோடை ஆற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டு இவ் ஆற்றின் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த காலங்களில் பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக தேசடைந்திருந்த சுளியோடை ஆற்றுப்பகுதியினை அண்டிய பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் நீர்ப்பாசனத் துறையினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04