ஹட்டன் பொலிஸ் பிரிவில் மூன்று தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் லெதன்டி தோட்டத்தின் புரடக் பிரிவில் இன்று நண்பகல் குறித்த மூன்று ஆண் தொழிலாளர்களை சிறுத்தை தாக்கியுள்ளது. இவர்கள் மூவரும் கடும் போராட்டத்தின் மத்தியில் சிறுத்தையிடம் இருந்து தமது உயிரை காப்பாற்றி கொண்டுள்ள போதும் கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் சிறிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போதைக்கு உயிர் ஆபத்துக்கள் இல்லை எனவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.