இம்முறையும் இரண்டாம் சுற்று சீட்டிழுப்பின் முடிவில் 25 இலட்சம் ரூபாவுக்கான வெற்றியாளர் தெரிவு

·    மாதாந்த அடிப்படையில் Cash Bonanza வெற்றியாளர் தெரிவில் செப்டெம்பர்  மாதத்துக்கான முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருவருக்காக தலா 10 இலட்சம்ரூபாய் பெறுமதியான 2 பணப் பரிசுகள். 

·    இவ்வருடம் இடம்பெற்ற இரு சுற்று சீட்டிழுப்புகளிலும் Cash Bonanza வெற்றியாளர் தெரிவில் மொபிடெல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் 393" 531 பேருக்கு 1"743 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை பரிசாக பகிர்ந்தளிப்பு.


2015 நவம்பர் மாதம் 6ஆம் திகதி, கொழும்பு – தேசிய மொபைல் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் மொபிடெல், ஒவ்வொரு நிமிடத்துக்கும் வெற்றியாளர் ஒருவரை உருவாக்கும் வகையில் முன்னெடுத்திருந்த Cash Bonanza பரிசிழுப்புத் திட்டத்தில் ஜூன்  மாதத்துக்கான வெற்றியாளர்கள் தெரிவின் மூலம் மொத்தமாக 43"248  பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடையே 220 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு 50 ரூபாய் பெறுமதியான ரீலோட், ரீசார்ஜ் அல்லது கட்டணப் பட்டியல் செலுத்தும் சகல வாடிக்கையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் 2015 Cash Bonanza வெற்றியாளர் தெரிவு மூலமாக, மொபிடெல் வாடிக்கையாளர்கள் 526,149 பேருக்கு அனுகூலங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு மொபிடெல் எதிர்பார்த்துள்ளதுடன், ‘ஒவ்வொரு நிமிடத்துக்கும்’, ‘நாளாந்தம்’, ‘வாராந்தம்’, ‘மாதாந்தம்’ வெற்றியாளர்களை தெரிவுசெய்யவுள்ளது. வருடத்தில் நான்கு காலாண்டு வெற்றியாளர் தெரிவையும் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இரண்டாம் காலாண்டு நிறைவுடன் 25 இலட்சம் ரூபாய் பரிசுக்கான வெற்றியாளர் தெரிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். இப் பணப்பரிசுக்குரிய வெற்றியாளர், மொபிடெல் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளரும், பண்டாரவளை பிரதேசவாசியுமான கோனார முதியன்சலாகே ருவன் சத்துரங்க என்பவரே ஆவார். 

மாதாந்த அடிப்படையிலான தலா மில்லியன் ரூபாய் பெறுமதியான பணப்பரிசை முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் ஒருவரும், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் ஒருவரும் வென்றுள்ளார்கள். இதனடிப்படையில், திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த மஹேஷ் பிரசன்ன விக்கிரமரத்ன  அவர்களும், வாரியப்பொலவினை சேர்ந்த ஆர் கே. .டப்ளியு. டி. எம்.ஆர. டி. எச் போகலந்த என்பவரும் இந்த பரிசை வென்றிருந்தனர்.

அதுபோலவே, வாராந்தம் முன்னெடுக்கப்படும் வெற்றியாளர் தெரிவின் மூலமாக, 8 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும், 4 பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 250,000 ரூபாய் வீதம் மொத்தமாக 30 இலட்சம் ரூபாய் பரிசாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2015 செப்டெம்பர்; மாதம் இடம்பெற்ற நாளாந்த அடிப்படையிலான வெற்றியாளர் தெரிவின் போது, 20 மொபிடெல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும், 10 பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் தெரிவுசெய்யப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டிருந்தது.

2015 வருடத்தின் இரு காலாண்டுகளுக்காக  முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுள் மொத்தம் 393"531 பேர் Cash Bonanza வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடையே 1"743 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை பரிசாக வழங்குவதற்கு மொபிடெல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

Cash Bonanza வெற்றியாளர் தெரிவுக்காக மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் புரோட்பான்ட் வாடிக்கையாளர்கள் தகுதி பெறுவதுடன், வருடம் முழுவதும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூபாய்; 500 வரை பணப்பரிசுகளை வெற்றியீட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. நாளாந்தம் இடம்பெறும் பரிசிழுப்பின் மூலமாக 100,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசுகள் 365 ஐ வெற்றியீட்டுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, வாராந்த வெற்றியாளர் தெரிவின் மூலமாக 156 வெற்றியாளர்களுக்கு 250,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசுகளை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாதாந்தம் 24 வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வீதம் பணப் பரிசுகளை வெற்றியீட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்காக காலாண்டுக்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான அதிர்ஷ்டசாலிகள் 4 பேரை தெரிவுசெய்வதற்கும் மொபிடெல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 2"300 இலட்சம் ரூபாவை பரிசாகவழங்க மொபிடெல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Cash Bonanza ஊக்குவிப்பு திட்டத்தின் மூலமாக 2014 ஆம் ஆண்டில் மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு 150 மில்லியன் ரூபாவுக்கும் (1"500 இலட்சம்) அதிகமான தொகை பரிசாக வழங்கப்பட்டிருந்ததுடன், மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு வெற்றியீட்டுவதற்கு அதிகளவு வாய்ப்புகளை வழங்கி, 2015 இல் வழங்கவுள்ள பணத்தொகையையும் 230 மில்லியன் ரூபாவாக (2"300 இலட்சம்) உயர்த்தியுள்ளது. நாளாந்தம் இடம்பெறும் வெற்றியாளர் தெரிவின் மூலம் கிடைக்கும் பணப் பரிசை பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர்கள் சூ111சூ எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு, தமது மொபிடெல் ணஅஊயளாணுகணக்கை செயற்படுத்திக் கொள்ளவேண்டும். Cash Bonanza திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களை சூ151சூ எனும் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திபெற்றுக் கொள்ள முடியும். மேலும் வெற்றியாளர்கள் தொடர்பான விபரங்கள், மொபிடெல் வாடிக்கையாளர் சேவை இலக்கமான 071 27 55 777 மற்றும் தபால் மூலமாக மட்டுமே வெற்றியாளர்களுக்கு அறியத்தரப்படும். இதன் போது, வாடிக்கையாளர்கள் வெற்றியீட்டிய பரிசுகளுக்காக எவ்விதமான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது2015 வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான Cash Bonanza சீட்டிழுப்பின்   ரூபா மில்லியன் பணப்பரிசினை வெற்றி பெற்ற திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த முற்கொடுப்பனவு வாடிக்கையாளரான மஹேஷ் பிரசன்ன விக்கிரமரத்ன  அவர்களை படத்தில் காணலாம்,2015 வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான Cash Bonanza சீட்டிழுப்பின் போது  ரூபா மில்லியன் பணப்பரிசினை வெற்றி பெற்ற வாரியப்பொலவினை சேர்ந்த பிற்கொடுப்பனவு வாடிக்கையாளரான திருமதி. ஆர் கே. .டப்ளியு. டி. எம்.ஆர. டி. எச் போகலந்த  அவர்களை படத்தில் காணலாம்,