வெள்ளத்தில் மூழ்கிய தொண்டைமானாறு

Published By: Daya

08 Dec, 2018 | 03:49 PM
image

அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியூடான  போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் குறித்த வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால் அவ்வீதியூடாக பயணம் செய்பவர்கள் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வீதியால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி ஒருவர் வெள்ளத்திற்குள் மறைந்திருந்த  குழியில் மாட்டி விபத்துக்குள்ளாகியிருந்தார்.

மேலும் வழி இலக்கம் 751,766,767 ஆகிய பயணிகள் பஸ்களும் ஆபத்தான நிலையில் அவ் வீதியூடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றன.

தொண்டைமானாறு துருசு புனரமைப்பின் போது அமைக்கப்பட்ட மண் மேடு உரிய முறையில் அகற்றப்படாதமையினாலேயே அங்கு தேங்குகின்ற நீர் வழிந்தோடமுடியாத நிலை காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04