இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விராட் கோலி தனது அதி­ரடி ஆட்­டத்­தினால் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்தி இந்­தி­யாவை அரை­யி­று­திக்கு இட்டுச் சென்றார்.

நேற்று நடை­பெற்ற குருப் – 2 இன் கடைசி லீக் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய அணி, இந்­தி­யா­வுக்கு 161 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக நிர்­ண­யித்­தது. இந்த போட்­டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதனால் ஆரம்­பத்­தி­லேயே அதி­ர­டி­யாக ஆட்­டத்தை தொடங்­கினர் ஆஸி. அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்கள். கவாஜா அதி­ர­டி­யாக விளை­யாடி 26 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­ட­மி­ழந்தார்.

அதனையடுத்து 44 ஓட்­டங்­க­ளுடன் பின்ச் வெளி­யே­றினார். 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்­தி­ரே­லியா 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்­டங்­களை எடுத்­தது.

இதனைத் தொடர்ந்து விளை­யா­டிய இந்­திய அணி 19.1 ஓவர்­களில் 5 விக்கெட்டுக்­களை இழந்து வெற்றி இலக்கை எட்டி­யது. 

ஒரு கட்­டத்தில் 16 ஓவர்­களில் 94 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து கிட்­டத்­தட்ட தோல்­வி­ய­டைந்து விடும் என்ற நிலை­யி­லி­ருந்த இந்திய அணியைஇ விராட் கோஹ்லி தனது நிதா னம் கலந்த அதி­ர­டியால் மீட்டார். இவர் 82 ஓட்­டங்­களைப் பெற்று இறு­தி­வரை ஆட்ட­மி­ழக்­காமல் களத்தில் நின்றுஇ அணியைஅரை­யி­று­திக்கு இட்டுச் சென்றார். 

நேற்­றைய போட்­டியின் நாய­க­னாக திகழ்ந்த விராட் கோலி மட்டும் இல்­லா­தி­ருந்தால் இந்­தியா நிச்­சயம் தோல்­வியைத் தழுவியிருக்கும்.