வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மீண்டும் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம் என்ற சொல் கூட எமது நாட்டிற்கு வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தினை காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு காவனயீர்ப்பு போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.