மாத்தளை, வில்கமுவ பிரதேசத்தில் நீரில் முழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீரோடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த பெண் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டு ஹெட்டிப்பொல வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் வில்கமுவ பேரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியென வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மரண விசாரணை இடம் பெறவுள்ளதுடன் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.