அச்சுவேலி வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத்தீர்வையே பெற முயற்சிக்கின்றோம் - தவிசாளர் நிரோஷ்

Published By: R. Kalaichelvan

07 Dec, 2018 | 02:17 PM
image

அச்சுவேலியில் வெள்ளப்பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்பட்டு எதிர்வரும் காலப்பகுதியில் அவர்களுக்கான நிரந்தரத்தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதில் பிரதேச சபை அக்கறையாக ஏனைய திணைக்களங்களுடன் கருத்துப்பரிமாறி வருவதாக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மழைநீரை கடலுக்குள் சென்று விடாது நிலப்பகுதியில் தேக்குவதன் வாயிலாக நிலத்தடி நீரையும் நிலங்கள் உவரடைவதையும் தடுக்கும் நோக்கில் தொண்டமனாறு தடுப்பு அணை மீளமைக்கப்பட்டது. 

இது மீளத்திருத்தி அமைக்கப்பட்டதன் பின்னர் வலிகாமம் கிழக்கின் தாழ்வான நிலப்பகுதிகளைக்கொண்ட அச்சுவேலி வடக்கு, கரதடி ஒழுங்கை போன்றவற்றில் வெள்ளத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அச்சுவேலி – தொண்டமனாறு வீதியில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இந் நிலையில் இத் தடுப்பு அணையின் கதவுகளைத் திறந்து நீரை வெளியேற்ற வேண்டும் என பாதிக்கப்படும் மக்கள் பிரதேச சபையினை அணுகுகின்றனர். 

எனினும் இக் கதவுகளைத் திறப்பது பற்றி விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டிய வகிபாகம் நீர்ப்பாசனத் தினைக்களத்திற்கே உள்ளது. 

எமது நீர்வளத்தினையும் மண் வளத்தினையும் பாதுகாக்கும் நோக்கிலேயே நீரை வெளியேற்றும் கதவுகள் திறக்கப்படவில்லை. 

இவ் வருடமே குறித்த தொண்டமனாறு நீர்த்தடுப்புக் கதவுகள் திருத்தியமைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் இவ் வருடம் பிரதேசங்களில் இனங்காணப்படும் வெள்ளப்பிரச்சினை போன்றவற்றுக்கு அடுத்த ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் நிலையான தீர்வுத்திட்டங்களை கொண்ட கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக இப் பிரச்சினையுடன் சார்ந்த திணைக்களங்கள் முற்சியில் இறங்கியுள்ளன. 

தற்போது எதிர்கொண்டுள்ள வெள்ளப்பிரச்சினை போன்றன எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படா வண்ணம் நிலைமையினை ஆராய்வதற்காக களமாகவும் தீர்வுக்கான அடிப்படையாகவும் அமைந்துள்ளன.

சில இடங்களில் மண் அணைகள் அமைக்கப்பட்டு குடியிருப்புக்களினுள் வெள்ளம் புகாது தடுக்கவேண்டியுள்ளது. அதுபோல் வீதிகள் வெள்ளத்தில் மூழ்காது வீதிகள் உயர்த்தவேண்டிய தேவைகளும் இனங்காணப்பட்டுள்ளன. 

அச்சுவேலி – தொண்டமனாறு வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்பட்டது. இவ்வீதியில் தற்போது வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பிலும் உரிய திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளோம்

வெள்ளத்தினால் உடனடியாகப் பாதிக்கப்படும் மக்களைப்பொருத்தளவில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மக்கள் எதிர்கொண்டுள்ள அவலங்கள் சொற்களில் அடங்காதவை. அவ் வகையிலும் எமது பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்குட்பட்ட மக்களின் விடயம் என்ற வகையிலும் இவ்விடயம் தொடர்பில் அபிவிருத்திக் குழுக்கூட்டங்களிலும் நாம் அதி கூடிய கவனம் கொள்வோம். 

இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஏனைய திணைக்களங்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளோம். அதேவேளை பிரதேச செயலகம், நீர்ப்பாசனத்திணைக்களம், அனர்த்த முகாமைத்துவப்பிரிவு என்பன இவ்விடயத்தில் பாதிப்புக்களை பார்வையிட்டுள்ளனர். 

இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21