அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடந்த காலத் தேர்தல்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள், பொறுப்புக்கூறல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விஷேட மீளாய்வுக் கலந்துரையாடலின்போது அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர்  திலின விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது, தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது இவ் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் எதிர்கொண்ட பல்வேறு விடயங்கள் இதன்போது தனித்தனியாக வினவப்பட்டதுடன், இவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், குறைபாடுகள், அவதானிப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அனைத்துத் தேரத்தல்களையும் கடந்த கால குறைபாடுகளற்ற முறையில் நடத்துவதுடன், மக்கள் நலனை மையப்படுத்தி பிரச்சினைகளும் குறைபாடுகளுமற்ற தேர்தல்கள் செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமாக இக்கலந்துரையாடல் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.