ஜப்பானில் இடம்பெற்ற பயிற்சியின்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டு நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காணாமல் போயுள்ளனர்.

ஜப்பானின் உள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்காவின் கடற்படை தளம் அமைந்துள்ளது. இதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் விமானத்தில் பறந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்ட பேதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது. 

குண்டுவீச்சு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் இருந்து இரவு நேரத்தில் பெற்றோல் நிரப்புவது தொடர்பான பயிற்சி கடற்பகுதிக்கு மேலே நடந்தது. 

இதன்போது எப்.ஏ.18 ரக போர் விமானத்துக்கு சி-130 என்ற பெற்றோல் விமானம் மூலம் எரிபொருள் நிரப்ப பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந் நிலையிலேயே இரு விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் வீழ்ந்தது. இதனால் எப்.ஏ.18 விமானத்தில் 2 வீரர்களும், சி-130 விமானத்தில் 5 வீரர்களும் காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணிகளில் ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த 09 விமானங்களும், 03 கப்பல்களும் ஈடுபட்டன. 

இவர்களுள் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் காணாமல்போன ஏனைய ஐவரையும் தோடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகத்கது. 

விமானம், ஜப்பான், அமெரிக்கா, மாயம்