பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொணிப் பொருளில் இவ்வமைதி ஊர்வலம் நடாத்தப்பட்டது. 

யாழ்  பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்து. ஊர்வலத்தினை தொடர்ந்து யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை மகஜரும் கையளிக்கப்பட்டது.