ஊவா மாகாண சபையின் வரவு - செலவுத்திட்ட நிதி அறிக்கை ஐ.தே.க.வின் ஆதரவால் நிறைவேறியது

Published By: R. Kalaichelvan

07 Dec, 2018 | 11:17 AM
image

ஊவா மாகாண சபையின் அடுத்தாண்டிற்கான (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை ஐக்கிய தேசியக்கட்சியின் அமோக ஆதரவுடன் 28 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ஊவா மாகாண சபையின் அடுத்தாண்டிற்கான (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை குறித்து கடந்த மூன்று தினங்களாக வாத விவாதங்கள் நடைபெற்று, 06-12-2018 இல் இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

மாகாண சபை மண்டபத்தில் நேற்று சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் நடைபெற்ற மேற்படி வாக்கெடுப்பில் சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் 14 பேரின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

இவ் வாக்கெடுப்பு இடம்பெறும் முன்பே, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரட்னாயக்க (ஐ.தே.க.) சபை அமர்வில் எழும்பி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையின் அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவு தர தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டுமென்று கூறி, வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். 

இவ் வாக்கெடுப்பில் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆளும் கட்சியினர் 16 பேருடன் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 14 பேருமாக 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 

சபையின் ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் மட்டும் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். 

இதன் பிரகாரம் 28 அதிகப்படியான வாக்குகளினால் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவருடன் 34 பேரைக் கொண்ட இம் மாகாண சபையின் ஜானக்க திஸ்ஸ குட்டியாராய்ச்சி என்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மட்டும் அன்றைய தினம் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

                                  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02