த.தே.கூ. எந்தவொரு ஆட்சியாளருக்கும் ஆதரவாக குரல்கொடுக்கவில்லை - கனடா உயர்ஸ்தானிகரிடம் ஆர்னோல்ட்

Published By: R. Kalaichelvan

07 Dec, 2018 | 10:24 AM
image

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்துக் குரல் கொடுத்ததே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்டை மாநகர சபையில் நேற்றையதினம்  சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் பின்பு நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஆர்னோல்ட் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னர் பலரால், அதாவது, சிங்கள எதிர் தரப்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டமையாலேயே எதிர்த்துக் குரல் கொடுத்தோமே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என்பதே உண்மை. அதனை சட்டரீதியாகவும் எமது தலைவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள்.

சட்டமும் அதன் நடைமுறையை முன்னெடுத்து வருகின்றது. சட்டத்தின் முடிவைக் கூற முடியாது. தமிழ் மக்கள் எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பற்றி கூறியிருந்தோம்.

ஒரு ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கைக்குள் வடகிழக்கு இணைக்கப்பட்டு, எமது பூர்வீக இடங்களில் பெரும்பான்மை மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்ளோ அத்தனை கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி ஐக்கியத்துடன் வாழ வேண்டுமென்றே கேட்டிருக்கின்றோம்.

யாராவது ஆட்சிக்கு வந்தாலும், எமது அரசியல் நிலைப்பாட்டை நீதியான நியாயமான முறையில் வென்றெடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதற்கு எந்த அரசு துணை புரிகின்றதோ அந்த அரசுடன் பணிபுரிந்து எமதுமக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது நோக்கம் என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04