பிரிட்டிஷ் கவுன்சிலில் பரீட்சார்த்திகளுக்கு கணினி ஊடாக IELTS பரீட்சைக்கு தோற்றும் வசதி

Published By: R. Kalaichelvan

06 Dec, 2018 | 07:39 PM
image

இலங்கையில் IELTS பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கணினியில் தோற்றும் வசதியை தாம் ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊடாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட ஆங்கிலப் பரிட்சையான IELTSற்கு பதிவு செய்து கணினியில் இந்த IELTS பரீட்சைக்கு தோற்ற முடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 5 ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த விசேட பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அனுபவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கும்ரூபவ் விருந்தினர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

கணினி மூல பரீட்சை முறையின் மூலம் வாரமொன்றில் அதிகளவு பரீட்சை அமர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதனூடாக பரீட்சார்த்திகளுக்கு தமது பரீட்சை தினத்தை நிர்ணயிக்கும் போது நிலையான திகதியை கொண்டிருக்கும் கடதாசி அடிப்படையிலான முறையுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சௌகரியத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

மாற்று முறைப்படி பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள பரீட்சார்த்திகளுக்கு 13 தினங்கள் காத்திருக்க வேண்டியிருந்த

நிலையில்ரூபவ் புதிய கணினி முறைப்படி பெறுபேறுகளை 5 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கெல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில்ரூபவ் “நாம் IELTS பரீட்சைக்கு தோற்றும் முறை மற்றும் அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் எம்மைஅர்ப்பணித்துள்ளோம்.

 கணினியில் IELTS  பரீட்சைக்கு தோற்றுவது என்பது,பல வழிகளில்

அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், பரீட்சார்த்திகளுக்கு அதிகளவு நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சௌகரியத்தையும் சேர்க்கும்” என்றார்.

புதிய கணினி முறையில்,பரீட்சார்த்திகளுக்கு செவிமடுத்தல், வாசித்தல் மற்றும் எழுத்து மூல தேர்வுகளுக்கு கணினியில் தோற்றலாம். பேச்சு தேர்வு வழமை போன்று நேரடியானதாக அமைந்திருக்கும். முதல் மூன்று பிரிவுகளும் ஒரே நாளில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன்,பேச்சு தேர்வை ஏனைய தேர்வுகளுக்கு முகங்கொடுப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அல்லது முகங் கொடுத்ததற்கு ஒரு வாரத்தினுள் தோற்றலாம். 

எந்த முறையை தெரிவு செய்தாலும் பரீட்சை உள்ளடக்கம்,புள்ளி வழங்கல்,காலம் மற்றும் கடினத்தன்மை போன்றன ஒரே மாதிரியானதாக அமைந்திருக்கும்.

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் பரீட்சைகளுக்கான பணிப்பாளர் ரொப் லோ கருத்துத் தெரிவிக்கையில் “கணினியில் IELTS பரீட்சை என்பது பாரம்பரிய கடதாசி அடிப்படையிலான பரீட்சை முறைக்கு மாற்றீடாக அமைந்திருக்கவில்லை. 

மாறாக பரீட்சார்த்திகளுக்கு அதிகளவு தெரிவுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த புதிய கணினி மூலமான தெரிவை மேற்கொள்ளும் பரீட்சார்த்திகளுக்கும்,வழமையான ஆங்கில மொழி பரிசோதனையை,அதே பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியாக இருக்கும்” என்றார்.

உயர் கல்வி மற்றும் புலம் பெயர்வு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆங்கில மொழி பரிசோதனைக்கான மிகவும்

புகழ்பெற்ற பரீட்சையாக  IELTS  அமைந்துள்ளது. வருடமொன்றில் சுமார் மூன்று மில்லியனுக்கு அதிகமானவர்கள் இந்த பரீட்சைக்கு உலகளாவிய ரீதியில் தோற்றுகின்றனர்.

 10,000க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள்,தொழில் வழங்குநர்கள் மற்றும் குடிவரவு அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட  இந்த பரீட்சையை,இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு உயர் கல்வி,புலம் பெயர்வு மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுச் செல்ல எதிர்பார்ப்போர் அதிகளவு தெரிவு செய்கின்றனர்.

IELTS பரீட்சைக்கு தோற்றும் வசதி அவுஸ்திரேலியாவில் முதலில் 2017 டிசம்பர் மாதம் கணினியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 2018 இல் IELTS வலையமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் பிரதான ஆங்கில மொழிக் கல்வி மற்றும் வளங்களை வழங்குநர் எனும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சில்,தற்போது கொழும்பு வளாகத்தில் பரீட்சை வசதியை வாரத்தில் மூன்று தடவைகள் வழங்குகிறது.

எதிர்வரும் மாதங்களில் தினசரி மூன்று தடவைகள் வரை பரீட்சைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

கணினி ஊடாக பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பான மேலதிக விவரங்களை https://takeielts.britishcouncil.org/ielts-on-computer எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18