அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது - முஜிபூர் ரஹ்மான் 

Published By: R. Kalaichelvan

06 Dec, 2018 | 06:22 PM
image

(நா.தினுஷா) 

அரசியல் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க கோரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை பெரும்பான்மைக்கு சாதகமாகவே அமையும்.பெரும்பான்மை விருப்பினை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செயற்பட முடியாது. 

அதேபோன்று ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பினை மீறி பாராளுமன்ற உருப்பினர்களாளும் பணியாற்ற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயபால எட்டியாராச்சி,அர்ஷன ராஜகருணா, மயந்த திஸாநாயக்க, முஜிபோர் ரஹ்மான், அஜித் மன்னபெரும, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஹிருனிகா பிரேமசந்ர உள்ளிட்டோர் நேற்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றினை சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தனர். 

குறித்த பிரேரணையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது முதல் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினூடான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயக ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க கோரியே அந்ந பிரேரணை சமர்ப்பிக்கப்படவிருந்தது. 

ஆனால் பின்னர் அந்த பிரேரணையை இன்னுமொரு தினத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

ஐக்கிய தேசிய கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15