வீடு புகுந்து திருடிய இருவருக்கு ஒரு வருடச் சிறை

Published By: Digital Desk 4

06 Dec, 2018 | 03:33 PM
image

திருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருட்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார்.

இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவன் எம்பதைக் கருத்தில் எடுத்த நீதிமன்று, அவரது தண்டனையை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம்,திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

இந்தத் திருட்டுக்களின் போது அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து திருடர்களை அடையாளம் கண்டுவைத்திருந்த திருநெல்வேலி இளைஞர்கள், திருடர்கள் வசமாக மாட்டுவார்கள் எனக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் திருநெல்வேலிப் பகுதியில் நடமாடிய 4 பேர், அந்தப் பகுதி இளைஞர்களால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த பையைச் சோதனையிட்ட போது, அதற்குள் பெருமளவு பித்தளைப் பொருள்கள் இருந்தன.

இதன்போது 2 பேர் தப்பி ஓட்டம் எடுத்தனர். ஏனைய இருவரும் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டனர்.

அவர்களிடம் மீட்கப்பட்ட பித்தளைப் பொருள்கள் நல்லூர் பகுதியில் திருடப்பட்டவை என அடையாளம் காணப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், இளைஞர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு இன்று தண்டனைத் தீர்ப்புக்காக நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

முதலாவது குற்றவாளிக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்த குற்றம் இருந்ததை மன்று கவனத்தில் எடுத்தது.

“குற்றவாளிகள் இருவரும் அத்துமீறி வீடொன்றுக்குள் புகுந்த குற்றத்துக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.

அந்த வீட்டுக்குள் பொருள்களைத் திருடிய குற்றத்துக்கு குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஒரு வருடம் சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவர் என்பதை மன்று கவனத்தில் எடுத்து, அவரது சிறைத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிவான் தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01