இந்தியா  நெருக்கடியான நிலையிலிருந்த வேளை பொறுப்பில்லாமல் விளையாடி தனது விக்கெட்டை இழந்த இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா  சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார்

இன்று இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா துடுப்பெடுத்தாடிய விதம் குறித்தே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன

ரோகித் சர்மா இன்று விளையாடுவது நிச்சயமற்றதாகயிருந்த போதிலும் அவர் ஆறாவது வீரராக அணியில் சேர்க்கப்பட்டார்

இந்திய அணி நான்கு விக்கெட்களை 41 ஓட்டங்களிற்கு இழந்து தத்தளித்துக்கொண்டி ருந்த நேரத்தில் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த இவர் 45 ஓட்ட்ங்களை  ஐந்தாவது விக்கெட்டிற்காக பெறுவதற்கு உதவினார்

ஒரு சந்தர்ப்பத்தில் ரோகித் சர்மா மூன்று சிக்சர்களின் உதவியுடன் 37 ஓட்டங்களை பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்

இதன் பின்னர் அவர் நதன் லயனின் பந்தை  எல்லைக்கோட்டினை நோக்கி அடித்தார், பந்து மார்கஸ் ஹரிசின் கைகளை தொட்டுக்கொண்டு எல்லைக்கோட்டை தாண்டியது

எனினும் அடுத்த பந்தையும் அவ்வறே அடித்து  அதேவீரரிடம் பிடிகொடுத்து ரோகித்சர்மா ஆட்டமிழந்தார்

இந்திய அணி நெருக்கடியான நிலையிலிருந்த வேளை ரோகித் சர்மா பொறுப்பற்ற விதத்தில் ஆட்டமிழந்தமை குறித்து இரசிகர்கள்சமூக வலைத்தளங்களில் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரோகித்சர்மாவை ஏன் டெஸ்ட் போட்டிகளிற்கு தெரிவு செய்யாமல் தவிர்த்தார்கள் என்பதை அவர் ஆடிய சொட் வெளிப்படுத்தியுள்ளது என இரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 அவரிற்கு தனக்கான சிறந்த இனிங்ஸை  விளையாடி இந்திய அணியை பலப்படுத்துவதற்கான போதிய அவகாசம் காணப்பட்டது,ஆனால் அவர் அந்த சொட்டை விளையாடினார் இது சுத்த முட்டாள்தனம் என அந்த இரசிகர் தெரிவித்துள்ளார்

ஒருநாள் ரி20 போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக காணப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஏன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதை இன்றைய அவரது ஆட்டமிழப்பு வெளிப்படுத்தியுள்ளது என  மற்றொரு இரசிகர் தெரிவித்துள்ளார்.