சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் நடந்தது என்ன? 

Published By: Vishnu

06 Dec, 2018 | 01:00 PM
image

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பசுபதி அச்சுதன் கடந்த மார்ச் மாதம் முதலாம் ( 01.03.2018 ) திகதி சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வடக்கு மாகாண ஆளுனரால் விஷேட நியமனம் மூலம் நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கேட்டுகொண்டதற்கு இணங்க வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ( 07.11.2018) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் தயாளினி மகேந்திரன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளில் பணிப்பாளர் வெற்றிடமும், ஊர்காவற்துறை தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வெற்றிடமும், முல்லைத்தீவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிடமும் ஏற்கனவே உள்ள போதும் ஏற்கனவே வைத்திய அத்தியட்சகர் உள்ள சுமூகமாக இயங்கிவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மத்திய சுகாதார அமைச்சினால் வைத்திய அத்தியட்சகர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இன் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்ற வைத்தியர் தயாளினி மகேந்திரன் 07.11.18 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க வைத்தியசாலைக்கு சென்ற சமயம் ஏற்கனவே வைத்தியசாலையின் அத்தியட்சகராக இருந்த ப.அச்சுதன் கடமை நேரத்திற்கு முன்பாகவே வைத்தியசாலையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. எனினும் அதில் உண்மையில்லை என வைத்தியர் ப.அச்சுதன் சி.சி.ரி.வி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 4 மணிக்கு வைத்தியசாலையின் அலுவலக நேரம் நிறைவடைந்த நிலையிலும்  பிற்பகல் 4.17 மணிக்கே தான் வைத்திய சாலையை விட்டு வெளியேறியதாகவும் தான் வெளியேறிய பின்பே வைத்தியர் தயாளினி மகேந்திரன் வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார் எனவும் வைத்தியர் ப. அச்சுதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பிலும் அவர் கடமைகளை பொறுப்பேற்க வருவார் என்பது தொடர்பிலும் தனக்கு எதுவிதமான அறிவித்தல்களும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலை சமூகம் சார்பில் வைத்தியர் ப.அச்சுதனை தொடர்ந்தும் வைத்திய அத்தியட்சகாரக பணியாற்ற அனுமதிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சமூகம், வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் சார்பில் 07.11.18 அன்று காலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

ஆளுனர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாகவும்,வைத்தியசாலை சமூகத்தின் கோரிக்கையினையும் காரணம் காட்டி இந்த ஆண்டு டிசம்பர் வரை வைத்தியர் ப.அச்சுதன் பணியினை தொடர அனுமதிக்குமாறும் இடமாற்றத்தை நிறுத்திவைக்குமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தனது செயாலாளர் இளங்கோவன் மூலம் கடிதம் ஊடாக பணித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனரின் பணிப்பினையும் மீறி மீண்டும் நேற்றுமுன்தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக தயாளினி மகேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கடமையாற்றிய வைத்தியர் ப.அச்சுதன் வரணி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாக இடம்மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர் ப.அச்சுதன் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில் புதிதாக சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவினை அமைத்தமை, விபத்து சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவினை இயங்க வைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் துரித கதியில் ஈடுபட்டார். இந்நிலையில் இவரை இடம்மாற்றியமை வைத்தியசாலைக்கு பாதிப்பாக அமையும் என வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58