இலங்கை வரலாற்றில் பதிவான பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு சம்பவம்

Published By: R. Kalaichelvan

06 Dec, 2018 | 02:09 PM
image

பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 278 மில்லியன் ரூபா பெறுமதியான பெருந் தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 278 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் தொடர்பான  தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35