இந்தோனேஷியாவில் சுமாமர் 5.5 ரிக்டெர் அளவில் நிலநடுக்கமொன்று இன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கிமையினால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர்.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கவில்லை.