INGAME Esports தெற்காசிய கிண்ணம் 2018 உடன் உலக மயமாகும் இலங்கையின் Esports

Published By: R. Kalaichelvan

05 Dec, 2018 | 07:19 PM
image

கடந்த சில வருடங்களாக இலங்கையில் Esports இன் தனிச்சிறப்பான வளர்ச்சியினால் Esports அமைப்பாளரான INGAME Entertainment நிறுவனம் INGAME Esports தெற்காசிய கிண்ணத்தில் முதல்தடவையாக இணைந்துள்ளது. 

5 நாடுகள் பங்குபற்றும் லீக் போட்டியாக இது அமையவிருப்பதுடன் இந்நிகழ்வின் வெற்றியாளருக்கு 1000,000 ரூபா வெற்றிப்பரிசையும் கொண்டுள்ளது.

Sri Lanka Esports Association (SLESA) பங்காளராக இணைந்திருப்பதுடன் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கையின் தொடர்பாடல், தொழில்நுட்ப முகவர் அமைப்பு என்பனவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. 

தமது நாடுகள் சார்பில் சிறந்த குழுக்கள் மற்றும் திறமையாளர்கள் பிரதிநிதித்துவம் செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் National Esports Federation, மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் யேவழையெட நுளிழசவள குநனநசயவழைn ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுகின்றன. 

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றும் அணிகள் நேரடியாக அழைப்பைப் பெற்றுள்ளன. டயலொக் கேமினால் அனுசரணை வழங்கப்படும் Gamer.LK இன் இலங்கை சைபர் கேம்ஸ் சம்பியன் ஷிப் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்ய தகுதி பெற்றுள்ளது.

“Esports உலகளாவிய ரீதியில் பாரிய வளர்ச்சிகண்டுவருவதுடன்  Esports புரட்சியில் இலங்கை விதிவிலக்காக அமைந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் நாம் கடுமையாக செயற்பட்டு வருகின்றோம்.

தெற்காசியாவில் Esports க்கான கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவது என்ற இலக்கை நோக்கி நாம் செயற்பட்டு வருவதுடன் இந்த இலக்கை எட்டுவதற்காக தனியார்துறையினர் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்” என InGame Entertainment இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீன் விஜயதிலக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சைபர் கேம்ஸ் (SLCG) 11 வருடங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்ரூபவ் இது டயலொக் பிளே எக்ஸ்போவின் ஒரு பகுதியாகும். டிஜிட்டல் ரீதியான மகிழ்வூட்டல்களில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த அனுபவங்களை டயலொக் பிளே எக்ஸ்போ வழங்கி வருகிறது. ஓடியோ பிடியோ, இசை, திரைப்படம், கேமிங் மற்றும் அவை தொடர்பான தொழில்நுட்பங்கள் இவற்றினால் வழங்கப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக  டயலொக் பிளே எக்ஸ்போ என்பன இலங்கையின் பரந்துபட்ட கிரீக் மற்றும் பொப் கலாசார கொண்டாட்டம் என்பனவற்றையும் கொண்டுள்ளன. கொழும்பு கொமிக் எக்ஸ்போ, டொப்கியருடன் இணைந்து வழங்கப்படும் Gamer.LK இன் eRacer சம்பியன்ஷிப் மொபைல் கேமிங் சம்பியன்ஷிப் 2018 போன்றன இலங்கையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் விளையாட்டுக்களாக விளங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57