முப்­ப­டை­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்னவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந் நிலையிலேயே  அவர் இன்று கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜரானபோது நீதிவான் அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.