பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரேசில் நாட்டில் அறுவை சிகிச்சை மூலம் இறந்த பெண்ணின் கருப்பையை மற்றொரு பெண்ணுக்கு பொருத்தி அதன் மூலம் குழந்தை பெற வைத்து வைத்தியர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இது போன்ற முயற்சி என்பது வைத்திய உலகத்திற்கு புதிதல்ல. ஆனால் இதற்கு முன்னர் 10 முறை இம்முயற்சி வெற்றியடையவில்லை. அதாவது பிறந்த குழந்தைகள் உயிர்பிழைக்கவில்லை.

இதுவே, முதல்முறையாக உயிருடன் குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்நிலையில், இந்த முறை நடைபெற்ற வெற்றிகரமான கருப்பை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை பற்றி ‘The Lancet’ எனும் வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது முக்கிய சிறப்பம்சமாகும்.