இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரிப்பு- இந்திய கடற்படை தளபதி

Published By: Rajeeban

05 Dec, 2018 | 11:58 AM
image

சீனா கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் எட்டு நீர்மூழ்கிகளை இந்து சமுத்திரத்திற்கு அனுப்பியுள்ளதாக புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இவற்றில் சில நீர்மூழ்கிகள் இலங்கை பாக்கிஸ்தான் வரை சென்றதாக அவை குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நீர்மூழ்கியினது பயணமும் ஒரு மாதம் வரை நீடித்தது என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் கப்பலொன்றும் அணுவாயுதங்கள் அற்ற நீர்மூழ்கிகளும் அணுவாயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கிகளும் இந்து சமுத்திர பகுதிக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளன.

இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இதனை உறுதி செய்துள்ளார்.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம்  இறுதியாக சீனா நீர்மூழ்கியொன்று இந்துசமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே தடவையில் ஆறு முதல் எட்டு நீர்மூழ்கிகள் நடமாடியுள்ளன,கடந்த வருடம் சீனாவின் 12 கடற்படை கலங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டன் அதில் அந்த நாட்டின் நாசகாரி கப்பல்களும் உள்ளன எனவும் இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

கடற்படை பலம் என வரும்போது பாக்கிஸ்தானை விட நாங்கள் அனைத்து வழியிலும் பலமாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள இந்திய கடற்படை தளபதி இந்து சமுத்திரத்தை பொறுத்தவரையிலும் எங்கள் பக்கமே சாதகதன்மை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பின்னணியில் இந்தியா 56 யுத்தகப்பல்களையும் ஆறு நீர்மூழ்கிகளையும் இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52