ஸ்டீவ்ஸ்மித் டேவிட் வோர்னர் இல்லாத போதிலும் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்

முதலாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா பலவீனமான நிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள ரகானே டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மித் வோர்னர் இல்லாத அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி இலகுவாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மித் டேவிட் வோர்னர் இருவரும் சிறந்த வீரர்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவரும் சதமடிக்கலாம் என ரகானே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின்  துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட இணைப்பாட்டங்களை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014-15 தொடரில் விராட்கோலியும் தானும் இணைந்து 262 ஓட்டங்களை பெற்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா விராட்கோலி குறித்து அதிக கவனம் செலுத்துவதால் ஏனைய வீரர்கள் பணியை அமைதியாக செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரின் பங்களிப்பும் முக்கியமானது எனவும் ரகானே தெரிவித்துள்ளார்