இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ளஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் விண்ணுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அதிநவீனமான முறையில் உறுவாக்கப்பட்ட  ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தியாவில் அதிவேக இணையத்தள  சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்கத்கது.பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. 

எனினும் குறித்த  செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.