கடும் வெப்பத்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு; பலர் நோயால் அவதி

Published By: Robert

27 Mar, 2016 | 09:13 AM
image

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது.

கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­து டன், விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­தின் நீர்­மட்டம் தற்­போது 50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இலங்கை மகா­வலி அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது.

காசல்றீ, மவு­சா­கலை மற்றும் சம­ன­ல ­வெவ ஆகிய நீர்த்­தேக்­கங்­க­ளிலும் வெகு­வாக நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ள­தாக மகா­வலி அதி­கா­ர­சபை சுட்­டிக்­காட்­டி­யுள் ­ளது.

மேலும், நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான 63 நீரேந்து பகு­தி­களில் நீரின் கொள்­ள­ளவு 80 முதல் 85 வீதம் வரை காணப்­ப­டு­வ­தாக திணைக்­க­ளத்தின் நீர் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் தற்­போது கடும் உஷ்­ணத்­துடன் கூடிய வெப்பக் கால­நிலை நிலவி வரு­கின்­றது. இதனால் மக்கள் அதிகம் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கால­நிலை மாற்­றத்­தினால் சிறு­வர்கள், வயோ­தி­பர்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பகலில் அதிக உஷ்­ணமும் இரவு வேளையில் கடும் பனி நில­வு­வ­தாலும் மக்கள் காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய்­க­ளுக்கு ஆளா­கி­வ­ரு­கின்­றனர்.

இதே­வேளை, இந்­நாட்­களில் மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­மாறு மின்­சக்தி அமைச்சு பொது­மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடு­பூ­ரா­கவும் வரட்­சி­யான கால­நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, நீர்மின் உற்­பத்தி 20 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­மையே இதற்குக் காரணம் என அமைச்சின் செய­லாளர் கலா­நிதி சுரேன் பட்­ட­கொட தெரி­வித்தார்.

வரட்சி நிலை தொடரும் பட்­சத்தில் எதிர்­கா­லத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19