7 நாட்களுக்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ; ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Published By: Vishnu

04 Dec, 2018 | 08:02 PM
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் நெருக்கடி இன்னும் 7 நாளில் நிறைவுக்குக் கொண்டுவர முடியும்.  இதனை நான் உறுதியாக கூறுகிறேன். நான் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ரணிலே பிரச்சினைக்குக் காரணம் . எனவே இந்த நிலைமையை மாற்ற நான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நல்லாட்சியின் கொள்கைகளை ரணில் சீரழித்த போது நான் பொறுமை காத்தேன். ராஜபக்ச ஆட்சியில் நான் இருந்த பொறுமையை விட நான் இதில் பொறுமை காத்தேன் .

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன்.

வடக்கு மக்களை ஏமாற்றினார். தீர்வு கொடுக்க வாய்ப்பிருந்தும் அவர் அதை செய்யவில்லை. ஏமாற்றினார். 

அவுஸ்திரேலியா, ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் ஆட்சி நிலைமைகளைப் பாருங்கள். அங்கு அரசுகள் இல்லாமலேயே அங்கு ஆட்சி நிலவுகின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் தாராண்மைவாத அரசியல் கொள்கை நாட்டை அழிவுக்குள்ளாக்கியது மட்டுமன்றி நல்லாட்சி எண்ணக்கருவையும் அப்பட்டமாக துவம்சம் செய்தது. அக்கொள்கையின் காரணமாக பண்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமன்றி தமக்கும் பல தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. 

அந்த செயற்பாடுகளுக்கு மத்தியில் தம்மால் எடுக்கக்கூடிய ஒரேயொரு முடிவாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே ஆகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் நாட்டு மக்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டை அழிவுக்குள்ளாக்கும் தீவிர தாராண்மைவாத அரசியல் செயற்திட்டத்தை தோல்வியுறச் செய்யக்கூடிய தேசாபிமானமும் மனித நேயமுமிக்க ஒரேயொரு அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். அதற்காக கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54