இலங்கைபிரஜையை சிக்கவைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது

Published By: Rajeeban

04 Dec, 2018 | 10:34 AM
image

போலி ஆவணங்களை தயாரித்து  இலங்கை பிரஜையை சிக்கவைத்த குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றார் என இலங்கை பிரஜையான முகமட் நிஜாம்டீன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்தார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இன்று அர்சலான் கவாஜாவை கைதுசெய்துள்ள  பொலிஸார் போலியான ஆவணங்களை தயாரித்தார் , நீதியை திசைதிருப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

பரமட்டா நீதிபதி சந்தேகநபரிற்கு பிணை வழங்க மறுத்துள்ளார்.

இது நன்கு திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் மூலம் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு எந்த வித உடனடி ஆபத்து இருப்பதாக தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரத்தில் இலங்கை பிரஜை நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டமை குறித்து பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.

நான் அவரிற்கு என்ன நடைபெற்றது என்பதற்காக வருந்துகின்றேன்,அவர் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டார் என்பதே எங்கள் குற்றச்சாட்டு என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே இலங்கை பிரஜையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்கவைத்தார் எனவும் தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி பெண் விவகாரமே இதற்கு காரணமா என்பது குறித்தும் ஆராய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு பல முக்கிய பிரமுகர்களை கைதுசெய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முகமட் நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47