நடிகை ராய் லட்சுமி, அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்க்ததில் தயாராகும் ‘மிருகா ’ என்ற படத்தில் மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

முப்பது வயதைக் கடந்தும் இன்றும் இளைஞர்களின் விருப்பமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நீயா=2, சின்ட்ரெல்லா, யார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இவர் ஏற்கனவே சௌகார் பேட்டை என்ற படத்தில் இளம் நடிகர் ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குநர் பன்னீர்செல்வம் எழுதியிருக்கிறார்.

ப.பாண்டியைத் தொடர்ந்த நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த், அடுத்ததாக ராய் லட்சுமிக்கு ஜோடியாக நடிக்கிறமை குறிப்பிடத்தக்கது.