வவுணதீவு சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்றில் ஆா்ப்பாட்டம்

Published By: Vishnu

03 Dec, 2018 | 03:03 PM
image

வவுணதீவு பொலிஸார் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவினால் இன்று அக்கரைப்பற்று சந்தைக் கட்டடத்தொகுதிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் எங்களுக்கு மீண்டும் போர் தேவை இல்லை, ஒத்துழைப்பை எதிர்ப்பவர்கள் துரோகிகள், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், ஒன்றிணைவோம், சமாதானத்திற்காக முன்வருவோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரீ.நவரெத்தினராஜா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

வவுனதீவில் பொலிஸாருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்துடன் இந்த நாட்டிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வரும் மக்கள் மீது மீண்டும் ஒரு சந்தேகத்தையும், சீர்குலைவையும் இது ஏற்படத்தியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

மிகவும் அர்ப்பணிப்புடன் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அமைதியையும், சமாதானத்தையும் ககட்டிக்காப்பதற்காக நாங்களும் பூரண உதவிகளைச் செய்து பங்காற்றியுள்ளோம். அது இன்று கேள்விக்குறியாக்கப்பட்டு  இதனை சில தீய சக்திகள் சுயநலன்களுக்காக தடைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்த முனைகின்றனர்.

சமாதன சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான ஈனச்செயலானது மிகவும் கோழைத்தனமானதும், அமைதியை விரும்பாதவர்களினதும் செயலாக இருப்பதுடன் இதனை அனைவரும் வன்மையாகக்க கண்டிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16