ஒதியமலை படுகொலை : 34 ஆவது ஆண்டு நினைவு, நினைவுத்தூபி திறப்பு

Published By: Digital Desk 4

02 Dec, 2018 | 04:20 PM
image

முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32  தமிழ் மக்களின் 34 ஆம் ஆண்டு  நினைவு தினமும் நினைவுத்தூபி திறப்பு நிகழ்வும்  இன்று  படுகொலை  நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும்  தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். 

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன்,      து.ரவிகரன் , ப .சத்தியலிங்கம்  மற்றும் வவுனியா வடக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவ உடைதரித்தோரால்   1984 டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதவிய இராணுவ முகாமிலிருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். 

இவ்வாறு 32 ஆண்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வு குறித்த கிராமத்தில் நடைபெற்றுவருகின்றது .

இந்த  படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்திருந்த நிலையில் இந்த வருடம் புதிதாக பாராளுமன்ற  உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் நிதி ஒதுக்கீட்டில் நினைவுத்தூபி அமைக்கபட்டு திறந்து வைக்கபட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08