பரபரப்பான ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மே.தீ.

Published By: MD.Lucias

26 Mar, 2016 | 09:51 AM
image

இருபது- 20 உலகக் கிண்ணத் தொடரின்  தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா - மேற்கிந்திய தீவுகள்  அணிகள் (குழு1) சந்தித்தன. தென்னாபிரிக்க அணியில் டுமினி, கைல் அப்போட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோசவ், ஆரோன் பாங்கிசோ இடம் பெற்றனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் டேரன் சமி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

பந்து வீசு;சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய  தென்னாபிரிக்க வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 

3ஆவது பந்திலேயே அம்லா (1 ஓட்டம்) ரன்-அவுட் ஆனார். பொப் டு பிளிஸ்சிஸ் (9 ஓட்டங்கள்), ரோசவ் (0), டிவில்லியர்ஸ் (10 ஓட்டங்கள்), டேவிட் மில்லர் (1 ஓட்டம்) ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையாக வெளியேற 47 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை (8.2 ஓவர்) இழந்து தென்னாபிரிக்கா ஊசலாடியது.

இந்த நெருக்கடியான கட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி கொக்கும், டேவிட் வைசும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன், 100 ஓட்டங்களை கடக்கவும் உதவி புரிந்தனர். குயின்டான் டி கொக் 47 ஓட்டங்களிலும் (46 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் வைஸ் 28 ஓட்டங்களிலும் (26 பந்து) ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 8 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் சேர்த்தது. கிறிஸ் மோரிஸ் 16 ஓட்டத்துடன் களத்தில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

அடுத்து 123 ஓட்டஙக்ள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகளுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ‘சிக்சர் மன்னன்’ கெய்ல் 4 ஓட்டங்களுடன் ரபடாவின் பந்து வீச்சில்  போல்ட் ஆனார். பிளட்சர் 11 ஓட்டங்களுடனும், ஜோன்சன் சார்லஸ் 32 ஓட்டங்களுடனும்;, வெய்ன் பிராவோ 8 ஓட்டங்களுடனும் வீழ்ந்தனர். 

சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 17-வது ஓவரில் ஆந்த்ரே ரஸ்செல் (4 ஓட்டங்கள்),  டேரன் சமி (0) இருவரையும் ஆட்டமிழக்க செய்த போது போட்டியில் பரபரப்பு தொற்றியது. மறுமுனையில் மிரட்டிக்கொண்டிருந்த சாமுவேல்ஸ் 44 ஓட்டங்களுடன் (44 பந்து, 6 பவுண்டரி) பிடியெடுப்பில் அரங்கு திரும்பினார்.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ரபடா வீசினார். முதல் பந்தில் ஓட்டம் எடுக்காத கார்லஸ் பிராத்வெய்ட் 2-வது பந்தை சிக்சருக்கு அனுப்பி அட்டகாசப்படுத்தினார். அடுத்த பந்து வைடானாது. மீண்டும் வீசப்பட்ட 3-வது பந்தில் பிராத்வெய்ட் ஒரு ஓட்டம் எடுத்தார்.

இதையடுத்து 3 பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. 4-வது பந்தை சந்தித்த ராம்டின் வெற்றிக்குரிய ஓட்டத்தை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

மேற்கிந்திய தீவுகள்  அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களை சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 

3-வது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இந்த பிரிவில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி அரைஇறுதியை உறுதி செய்தது. 2-வது தோல்வியை சந்தித்த தென்னாபிரிக்காவின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41