மாணவர்களுக்கிடையேயான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை:ஹிஸ்புல்லாஹ் 

Published By: R. Kalaichelvan

02 Dec, 2018 | 01:28 PM
image

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த  பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, நிகழ்வுகள் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில், 

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன்,  போதைப் பொருள் விநியோகம், பாவனை, ஆகிய விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தற்போது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களது செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மாற்றமடைய வேண்டும்.சில நபர்கள் அறியாமல் செய்யும் தவறு ஒட்டுமொத்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

பாடசாலையின் ஒழுக்கம், கல்வி, பௌதீக வளங்களை வளர்ப்பதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் என பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51