மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர் 

Published By: R. Kalaichelvan

01 Dec, 2018 | 12:58 PM
image

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார். காரணம் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும். 

பாராளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் தனது கட்சி சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார். 

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இணைந்து அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிதாயங்களுக்கு எதிராகவும் என்ன நடவடிக்கைளை முன்னெடுத்தாலும் அதனை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. 

எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீதிமன்ற தீர்பிற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04