அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களால் அபார வெற்றி : அரையிறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் (Highlights)

Published By: MD.Lucias

25 Mar, 2016 | 07:09 PM
image

உலகக் கிண்ண லீக் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியினையடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான் .

இந்தியாவில், ஐ.சி.சி., 6ஆவது உலகக் கிண்ணத் தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று மாலை நடந்த  போட்டியில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

 நாணய சுழற்சியில் பெற்றி அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்தவகையில், அவுஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா (21) நல்தொரு ஆரம்பத்தை பெற்று கொடுத்தார். டேவிட் வோர்னர் (9) ஏமாற்றினார். ஆரோன் பின்ச் (15) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய  ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தார். மெக்ஸ்வெல் (30) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் வொட்சன் அதிரடி காட்ட, அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ஓட்டங்களை குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் (61), வொட்சன் (44) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  

சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷேசாத் (1) ஏமாற்றினார். ஷர்ஜீல் கான் (30), கலித் லத்திப் (46), உமர் அக்மல் (32), சொயிப் மாலிக் (40) ஓரளவு ஆறுதல் அளித்தனர்.  அப்ரிடி (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை.  

  பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா சார்பில் போல்க்னர் 5 விக்கெட் கைப்பற்றினார். 

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மூன்றாவது தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22