அனுமதி கிடைக்காத டாக்டர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்படும்

Published By: MD.Lucias

25 Mar, 2016 | 06:06 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

பாடசாலை அனுமதி கிடைக்காமல் உள்ள டாக்டர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிப்படுத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய சங்கத்தினர் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே இந்த உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதென சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் நளின்த ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை  முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள டாக்டர்களின் பிள்ளைகள் சிலருக்கு தற்போது வரை பிரபல்யமான பாடசாலைகளில் அனுமதி கிடைக்கவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமது பிரதிநிதிகள் ---பலர் கலந்து கொண்டனர்.

நாம் தெரிவித்த விடயங்களுக்கு செவிமடுத்த ஜனாதிபதி இதுவரையில் பாடசாலைகளில் அனுமதி கிடைக்காத டாக்டர்களின் பிள்ளைகளின் பெயர்கள் பட்டியலை கையளிக்குமாறு சங்கத்திற்கு அறிவித்தார்.

இச் சந்திப்பின் போது டாக்டர்களின் இடமாற்றங்கள் 4 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதால் தமது பிள்ளைகளுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை பாடசாலை மாற்றப்பட வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியதாக சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47