பாகுபலி படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கவிருக்கும் ஆர். ஆர். ஆர். என்ற படத்தில் நடிப்பதற்கு நடிகை ப்ரியா மணி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கி இந்திய அளவில் பெரிய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் எஸ். எஸ் ராஜமவுலி. இவரின் இயக்கத்தில் அடுத்து ஆர். ஆர். ஆர். என்ற பெயரில் தெலுங்கு, தமிழ் ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் ஒன்று தயாராகிறது.

இதில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் தேஜா, ஜுனியர் என் டி ஆரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. 

இதில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காக பருத்தி வீரன் படத்தின் மூலம் தேசிய விருதுப் பெற்ற நடிகையான ப்ரியா மணி தெரிவாகியிருக்கிறார். நடிகை ப்ரியா மணி திருமணத்திற்கு பிறகு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

இதனிடையே ரசிகர்கள் ப்ரியா மணிக்கு, ‘பாகுபலி ’யில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த போன்ற வேடங்கள் தான் ஆர். ஆர். ஆர் (ராம ராவண ராஜ்ஜியம்) படத்தில் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும், ராஜமவுலி தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுப்பவர் என்பதால், இவருடன் பணியாற்றிய ப்ரியா மணிக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.