'' வடமாகாண கல்வியை வளர்ச்சியடையச் செய்ய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்''

Published By: R. Kalaichelvan

30 Nov, 2018 | 12:28 PM
image

வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.  இது தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தி வருவதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

ஏனைய மாகாணங்களில் உள்ள சட்டம் இங்கே போதாமல் இருக்கிறது. கல்வித்துறையினை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதிக்கு விசேடமான சட்ட திட்டங்களை அமுல்செய்ய வேண்டிய தேவை எழுகின்றது. அது தொடர்பில் நாம் அனைவரும் ஒன்றாக பேசி முடிவு செய்ய வேண்டும். 

யாழ்ப்பாணத்தின் பெருமையை கூறும் கல்வியை முன்நோக்குவதற்கு ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதாது அவர்கள் அதற்கு மேலாக சேவை செய்யவேண்டும்.

ஆசிரியர்கள் கூலிக்காக வேலை செய்யக்கூடாது. அவர்களுக்கு தூர நோக்கம் வேண்டும். மாணவர்கள் மீது அன்பு, கருணை, இரக்கம் காட்ட வேண்டும். பாடசாலைக்கு வரும் மாணர்வகளுக்கு ஒரு தாய் தந்தையராக அவர்கள் இருக்க வேண்டும். 

அவ்வாறு இருந்தால் மட்டுமே மாணவர்களை கல்வியில் முன்னேற்றம் செய்ய முடியும். இப்பாடசாலையினை ஆரம்பித்த வேலுப்பிள்ளை ஐயா போன்று பலர் முற்காலத்தில் சமூக அக்கறையுடன் ஆசிரியர் சேவை செய்திருக்கின்றனர். அவர்களை உதாரணமாக நாங்கள் எடுக்க வேண்டும். 

இங்கு கல்வியை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் நன்மை கருதி கடுமையான தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க வேண்டும். தவறு செய்தால் முதலில் நல்ல அறிவுரை கொடுக்க வேண்டும் அடுத்து உத்தரவு. அதனையும் பொருட்படுத்தாதோருக்கு தண்டணை வழங்குவது கட்டாயமாகின்றது என தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் யூட் மரியரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் பா.சத்தியசீலன், பிரதேச செயலாளர் சிவசிறி, பிரதி கல்வி பணிப்பாளர் தவமனோகரன் வலி வடக்கு பிரதேசசபை தலைவர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33