மாலைதீவுப் பிரஜை உட்பட இருவர் விமானநிலையத்தில் கைது

Published By: Daya

30 Nov, 2018 | 09:48 AM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட  இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரும் மாலைதீவைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரும் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நேற்று இரவு மாலைதீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள்,  பயணப்பொதியை சோதனையிட்டபோது மறைத்து கொண்டு வந்த ஒரு  தொகை தங்க ஆபரணங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கழுத்து மாலை 2 உட்பட இரு தங்கபிஸ்ட்களை பயணப்பொதியில் மறைத்துக்கொண்டு வந்ததையே அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

சுமார் 30 இலட்சத்து 48 ஆயிரத்து 810 ரூபா பெறுமதியான 233 கிராம் நிறைகொண்ட ஒரு தொகை தங்க ஆபரணங்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59