இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்றம் ; மற்றுமோர் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானம்

Published By: Vishnu

30 Nov, 2018 | 08:19 AM
image

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இந் நிலையில் பாராளுமன்றத்தில் பொது மக்கள் கலரியும், விசேட அதிதிகளுக்கான கலரியும் இன்றும் மூடப்படுவதுடன், ஊடகவியலாளர்களுக்கான கலரி மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பது குறித்து இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினையும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் 123 வாக்குளினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்றைய அமர்வின்போது அமைச்சுக்களின் அலுவலக செலவுகளை நீக்கும் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10